Saturday, 12 November 2011

புகைப் பழக்கம் !

அஸ்ஸலாமு அலைக்கும்!
 
    நெடுங்காலமாக தொடர்ந்து ஆராய்ந்து தெளிந்து புகைப்பிடிப்பதால் உடலுக்கு விளையும் ஊறுகளையும், நோய்களையும் விரிவாகவும் விளக்கமாகவும் மருத்துவ வல்லுனர்கள் எடுத்துச் சொல்லியும் எழுதியும் வருகிறார்கள். புகைப்பிடிப்பவர்கள் மாத்திரமின்றி அவர்களைச் சூழ்ந்திருப்பவர்களும் கூட அப்புகையை சுவாசிக்க நேரிடுவதால் பல்வேறு உடல் கோளாறுகளுக்கும், வியாதிகளுக்கும் ஆளாகிறார்கள். 
    சுயமாக புகைப்பிடிக்கும் பழக்கம் þல்லாதவர்களுக்கும் புகைப்பிடிப்பவர்கள் வெளியிடும் புகையை அவர்களின் அருகில் þருந்தமையால் அவர்கள் விடும் புகையை உட்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு ஆளாகி, அதன் காரணமாக அவர்களுக்கும் நோய் ஏற்படுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். உண்மையில் அவர்கள் புகைப்பிடிக்காவிட்டாலும் அருகில் þருந்து சுவாசிப்பதால் அவர்களை செயல் அற்ற புகைப்பிடிப்பவர்கள் (Passive Smokers) என்று மறுத்துவ ரீதியாக வகைப்படுத்தியுள்ளனர். ஆராய்ச்சியாளர்கள் þவ்விதம் பயங்கர கேடுகளை விளைவிக்கும் ஒரு 'சமூக விரோதி' புகைப்பிடித்தல் ஆகும் என்கின்றனர்.
    þறைமறையிலும், நபிமொழிகளிலும் புகைப்பிடித்தல் பற்றிய நேரடியான அறிவிப்புகள் காணப்படவில்லை எனினும், அது உடலுக்கு ஊறுகளையும், உயிருக்கு ஆபத்தையும் விளைவிக்கும் கொடிய பழக்கம் என்ற உண்மையின் அடிப்படையில் புகைப்பிடிப்பது தவிர்க்கப்பட வேண்டும் என்பதை யார் மறுக்கமுடியும்?
    þஸ்லாமிய அடிப்படையில் உயிரை துரிதமாகவோ, படிப்படியாகவோ போகவல்ல  நஞ்சு போன்ற பொருட்களையும், உடல் ஆரோக்கியத்தை பாதிக்கவல்ல அல்லது உடல் கோளாறுகளை விளைவிக்க வல்ல பொருட்களையும் உண்ணுவதும் பருகுவதும் தவிர்க்கப்பட வேண்டும் என்பது பொதுவான நியதி.
    நீங்கள் உங்களையே கொலை செய்து கொள்ளாதீர்கள் - நிச்சயமாக அல்லாஹ் உங்களிடம் மிக்க கருணையுடையவனாக þருக்கின்றான்.(அல்குர்ஆன் 4:29)
    þன்னும் உங்கள் கைகளாலேயே உங்களை அழிவின் பக்கம் கொண்டு சொல்லாதீர்கள்.  (அல்குர்ஆன் 2:195)
    உண்ணுங்கள் பருகுங்கள்; எனினும் வீண் விரயம் செய்யாதீர்கள்.(அல்குர்ஆன் 7:31)
    மேலே கண்ட þறைவசனங்கள் மூலம் புகைபிடிப்பது மற்றும் கேடு விளைவிக்கக்கூடிய பழக்க வழக்கங்கள் தவிர்க்கப்பட வேண்டும் என்பது உறுதியாகவில்லையா?
     மார்க்கம், மருத்துவம், ஒழுக்க ரீதியில் தீய பழக்கம் என கருதப்படுவதை முஸ்லிம்கள் தாமும் தவிர்த்து, சமுதாயத்தினரையும் தவிர்க்கத் தூண்டுவதை விடுத்து, தாமே அக்கொடிய பழக்கத்திற்கு அடிமையாக þருப்பது þஸ்லாத்திற்கும் முஸ்லிம் சமுதாயத்திற்கும் கேடாகும்.
    புகைப்பிடிப்பவர்களிடம் அதன் தீமைகளை எடுத்துரைத்து அப்பழக்கத்தை விட்டுவிடும்படி வேண்டினால் சாதாரணமாக அவர்கள் கூறுவது "புகைப்பிடிப்பதால் ஏற்படும் தீமைகள் தெரியாமலில்லை; உடல் பாதிக்கப்படுவது உணராமலுமில்லை; ஆனால் பாழாய்ப்போன வழக்கத்தை விட முடியவில்லையே" என்பதுதான். புகைப்பிடிக்கும் அறிஞர்களும் கூட þதையே கூறுவது அவர்கள் கற்ற கல்விக்கும் பெற்ற அறிவுக்கும் அழகல்ல.

மூளை சுறுசுறுப்படைய வேண்டுமா....கனவு காணுங்கள் !

அஸ்ஸலாமு அலைக்கும்!

   ஏதாவது தவறு செய்துவிட்டாலோ, அல்லது நினைவில்லாமல் மறந்துவிட்டாலோ பிறரிடம் இருந்து முதலில் வரும் கேள்வி என்ன புத்தி மழுங்கிப் போச்சா என்பதுதான். அந்தளவிற்கு மனிதர்களுக்கு தலைமைச் செயலகமான மூளையின் பங்கு முக்கியமானது. மனிதர்களுக்கு வயசாக வயசாக, ஞாபக மறதி, தோல் சுருக்கம், நடை தளர்ச்சி, மூட்டுவலி இப்படி எத்தனையோ பிரச்சினைகள் வரத்தொடங்கும். அவற்றை தவிர்க்க முடியாது என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் முதுமையினால் ஏற்படும் நோய்களை ஏற்றுக்கொள்ளும் மனமானது வயசு ஏற ஏற அறிவும் கூட வளறவேண்டும் என்றுதான் நினைக்கிறது. எனவே வயது முதிர்ச்சியுடன் சேர்த்து, அறிவு முதிர்ச்சியும் இருக்க வேண்டும் என்பதற்காக விஞ்ஞானப்பூர்வமான ஆதாரங்களோட, பல்வேறு ஆய்வுகளின் அடிப்படையில முத்தான 10 வழிகளை சமீபத்துல ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். அவைகளை உங்களுக்காகக் கொடுத்துள்ளோம்.

ஒரு நாளைக்கு 4 காஃபி
காலையில் எழுந்த உடன் ஆற அமர ருசித்து காஃபி குடியுங்கள். ஏனெனில் காஃபியில் உள்ள கெஃபீன் என்னும் வேதிப்பொருள், மூளையை பாதுகாக்கிறது. நாளொன்றுக்கு நான்கு கப் காஃபி குடித்தால் அல்ஷெய்மர்ஸ் என்ற நினைவாற்றலை பாதிக்கும் நோய் வராமல் தடுக்கப்படுகிறதாம். இந்த மருத்துவத்தன்மையானது, காஃபியில இருக்குற கெஃபீன் லேர்ந்து கிடைக்கிறதா ஆன்டி ஆக்ஸிடென்ட்ஸ் என்னும் வேதிப்பொருள்லேர்ந்து கிடைக்கிறதா என்பது பற்றியும் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.

மூளையைத் தூண்டுங்கள்
எவ்வளவுக்கு எவ்வளவு உங்க மூளையை கசக்கி ஒரு விஷயத்தைக் கற்றுக்கொள்ள முயற்சி செய்கிறீர்களோ, அவ்வளவும் உங்க முதுமைக் காலத்துல அறிவு முதிர்ச்சிக்கு வித்திடுமாம்!. ஒரு புது கணக்குக்கு விடை கண்டுபிடிக்கிறதுல மூளைக்கு கிடைக்குற பலனைவிட, சிக்கல் விளையாட்டுல எல்லா பகுதியையும் ஒன்னா சேர்க்குறதுல கிடைக்குற பலன் ரொம்பக் குறைவாம். குறுக்கெழுத்துப் போட்டியோ அல்லது அதற்கு இணையான மூளைப் பயிற்ச்சி விளையாட்டுகளோ, இவை எல்லாம் மூளையை பெரிதாக மேம்படுத்துகின்றன என்பதை திட்டவட்டமான ஆதாரங்களுடன் வரையறுக்கும் ஆய்வுகள் இதுவரை இல்லை!.

மன உளைச்சலை குறைங்க
மன உளைச்சலினால் நினைவாற்றல் சக்திக்கு அடிப்படையான மூளையின் ஹிப்போகேம்பஸ் மற்றும் இன்னும் சில பகுதிகளில் விஷத்தன்மையுள்ள பல ரசாயனப் பொருள்கள் கொட்டப்படுகிறதாம். யோகா, நண்பர்களுடன் பேசுதல் போன்ற செயல்களில் ஈடுபட்டால், மன உளைச்சல் குறைந்து, நினைவாற்றல் அதிகரிக்கிறது என்கிறது ஆய்வு

கனவு காணுங்கள்!
கனவு காண்பதால் மூளை வளர்ச்சியடையும் என்ற அதிசயிக்கத்தக்க உண்மை கண்டறியப்பட்டுள்ளது. கண்களை திறந்து கொண்டே பகல் கனவு காண்பதால் எந்த பிரயோசனமும் இல்லை. சரியான நேரத்தை ஒதுக்கி, உறங்கும்போது, வரும் கனவுகள் ஒருவரின் நினைவாற்றல் மீதான மேற்பார்வை செய்யும் மூளை, தேவையில்லாதவற்றை அழித்து, முக்கியமானவற்றை செப்பனிட்டு பாதுகாக்கிறதாம். ஆனால் சரியான தூக்கமின்மையால் நம் நரம்புத் தொடர்புகளின் (synapses) மீது, ஒரு வித புரதங்கள் தேங்கி, சிந்திக்கும் மற்றும் கல்வி கற்கும் திறன் குறைந்து போகிறதாம். முக்கியமா, வருடக்கணக்கில் சரியான தூக்கமில்லாதவர்களுக்கு, அவர்களின் முதுமையில் அறிவுத்திறன் பெரிதும் குறைந்துவிட வாய்ப்புகள் இருக்கிறதாம்!

சுறுசுறுப்பான செயல்பாடு
நாளொன்றுக்கு 30 நிமிடங்கள் சுறுசுறுப்பாக ஏதாவது வேலை செய்யவேண்டும் என்கின்றனர் ஆய்வாளர்கள். இது மூளை ஆரோக்கியத்தை மிகவும் மேம்படுத்துகிறதாம். நடப்பது, தோட்ட வேலை செய்வது, ஓடுவது இப்படி எதுவாக இருந்தாலும் அரைமணி நேரம் தொடர்ந்து செய்தால் மூளை வளர்ச்சி அதிகரிக்குமாம்.

நோயின்றி வாழ்வோம்
வருமுன் காத்துக்கொள்ளக் கூடிய நோய்களான, நீரிழிவு நோய் (Type II diabetes), உடல்பருமன், ரத்தக் கொதிப்பு போன்றவை கூட ஒருவரின் மூளையை பாதிக்கின்றனவாம்! உடலளவிலான எல்லா உபாதைகளுமே, மூளையின் கற்கும் திறனையும், நினைவுத்திறனையும் பெரிதும் பாதிக்கின்றனவாம். எனவே உடலை பேணுவதன் மூலம் மூளை வளர்ச்சியை அதிகரிக்கலாம்.

உணவுக் கட்டுப்பாடு

அதிகமாக உண்ணுவதன் மூலம் மூளை சோர்வடைந்து நினைவாற்றல் பாதிக்கிறதாம். அதேசமயம், உணவுக் கட்டுப்பாடு என்ற பெயரில் மிகவும் குறைவாக உட்கொண்டாலும் மூளை பாதிக்கப்படுகிறதாம். அவர்கள் கவனச்சிதறல், குழப்பம் மற்றும் நியாபகச் சக்தி குறைவு போன்ற உபாதைகளால் பாதிக்கப்படுகிறார்களாம். எனவே அதிக நார்ச்சத்துள்ள மிதமான அளவில் கொழுப்பும் புரதமும் உள்ள உணவை உட்கொள்வதன் மூலம் செரிமானச் செயல்பாடானது சீராக நடைபெற்று உடல் பாகங்களின் ஆரோக்கியத்தை நீண்டகாலம் பாதுகாத்து சரியான நிலையில் வைத்திருக்க உதவுகிறது.

மீன் சாப்பிடுங்க
மூளைவளர்ச்சியை அதிகரிப்பதில் ஒமேகா 3 எனப்படும் கொழுப்பிற்கு முக்கிய பங்குண்டு. இது மீன்களில் அதிகம் காணப்படுகிறது. ஒமேகா 3 கொழுப்பு நிறைந்த விதைகளையும் அதிகம் உண்ணலாம். மீன் எண்ணெய் மாத்திரைகள் தேவையில்லை.

மாத்திரைகளை தவிருங்கள்
வைட்டமின், தாது மாத்திரைகள் அப்புறம் சில நினைவாற்றல் மாத்திரைகள் எல்லாம் மூளைவளர்ச்சியை மேம்படுத்துவதாக சொல்லப்படுகிறது. இவற்றை உட்கொள்வதன் மூலம் ரத்தக் கொதிப்பு, செரிமானக் கோளாறு, மலட்டுத்தன்மை பிரச்சினைகள், மன உளைச்சல் போன்ற நோய்களும் தோன்றுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

Monday, 31 October 2011

உணவு உண்பதற்கு முன்...!

அஸ்ஸலாமு அலைக்கும்!

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக, அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்;

‘உங்களில் ஒருவர் உணவு உண்ண முற்பட்டால் ‘பிஸ்மில்லாஹ்’ என்று கூறட்டும். அவ்வாறு கூற மறந்துவிட்டால் ‘பிஸ்மில்லாஹி அவ்வலஹு வஆஹிரஹு’ என்று சொல்லட்டும்.

(ஆதாரம் : புகாரி)

நபியவர்கள் சொன்னதை தான் செவிமடுத்ததாக ஜாபிர் (றழி) அவர்கள் பின்வருமாறு அறிவிக்கிறார்கள்.

‘ஒருவர் தனது வீட்டினுள் நுழையும் போதும் உணவு உட்கொள்ளும் போதும் அல்லாஹ்வை நினைவு கூர்ந்தால் சைத்தான் (அடுத்த சைத்தான்களை விழித்து) உங்களுக்கு இரவு தூங்குவதற்கு இடமோ உண்ணுவதற்கு உணவோ (இன்று) இல்லையெனக் கூறுவான்.



அந்த மனிதன் வீட்டினுள் நுழையும் போது அல்லாஹ்வை நினைவு கூரவில்லையாயின் சைத்தான் ‘உங்களுக்கு இரவு தூகுவதற்கு இடம் கிடைத்துவிட்டது’ என்பான் உணவு அருந்தும் போதும் அந்த மனிதன் அல்லாஹ்வை நினைவுபடுத்தவில்லையாயின், சைத்தான் ‘உங்களுக்கு இரவு தூங்க இடமும், இரவுச் சாப்பாடும் (இரண்டும்) கிடைத்து விட்டன’ என்பான்.

(ஆதாரம் : முஸ்லிம்)

உணவு உட்கொள்ள ஆரம்பிக்கும் போது ‘பிஸ்மில்’ சொல்வது மிக முக்கியமானதொரு ஸ¤ன்னா என்பது இமாம்களின் ஏகோபித்த முடிவாகும். இவ்வாறு பிஸ்மில் சொல்லாதவர் தனது உணவில் சைத்தானையும் சேர்த்துக் கொள்கிறார் என்று நபியவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்கள்.

இப்னு உமர் (றழி) அவர்கள், நபி (ஸல்) அவர்கள் கூறியதாக பின்வருமாறு அறிவிக்கிறார்கள் :

உங்களில் ஒருவர் தனது இடது கையால் சாப்பிடக் கூடாது. இடது கையால் குடிக்கவும் கூடாது. உண்மையில் சைத்தான் இடதால் சாப்பிடுகிறான், இடதால் குடிக்கிறான்.’

(ஆதாரம் : முஸ்லிம்)

அபூ ஸல்மா (ரழி) அவர்கள் கூறுகிறார்கள்; ‘நான் சிறுவனாக இருந்தபோது ஒரு முறை நபியவர்களின் மடியில் அமர்ந்திருந்தேன். எனது கை உணவு தட்டில் அங்குமிங்குமாக சென்றது. இதை கண்ட நபியவர்கள் சிறுவனே பிஸ்மில் சொல் வலது கையால் சாப்பிடு உனக்கு அருகே இருக்கும் உணவைச் சாப்பிடு என்றார்கள்.

Wednesday, 12 October 2011

حديث

அஸ்ஸலாமு அலைக்கும்!

التآلف مع الإخوان

وقال النبي صلى الله عليه وعلى آله وسلم المؤمن ألف مألوف ولا خير فيمن لا يألف ولا يؤلف

Wednesday, 28 September 2011

ரமளானுக்குப் பிறகு நமது நிலை?

وماذا بعد رمضان ؟

ரமளானுக்குப் பிறகு நமது நிலை என்ன?
இவற்றை நாம் அலசிப் பார்ப்பது நமது தலையாய இன்றைய கடமையாகும். நமது நிலையயை மூன்றாகப்  பிரிக்கவாம்.
الوقفة الأولي முதல் நிலை

ماذا استفدنا من رمضان؟

ரமளான் மூலம் நாம் அடைந்த பயன் என்ன?
புனித ரமளானிலிருந்து நாம் விடைபெற்று விட்டோம். குர்ஆன் அருளப்பட்ட மாதம்! (தக்வா) இறையச்சத்தையும், (ஸப்று) பொறுமையையும், (ஜிஹாத்) மனத்தை வெல்லும் போராட்டத் தையும்,( ரஹ்மத்) இறைவனின் அருளையும், (மக்பிரத்) அவனின் மன்னிப்பையும், இன்னும் பல அருட்பேறுகளையும், பக்குவ நிலையையும் பெற்றுத்தந்த அரிய மாதம்.
பகலெல்லாம் நோன்பிருந்த அந்த மாண்பார் நாட்களும் இரவெல்லாம் நின்று வணங்கிய பசுமையான நினைவுகளும் இறைவனின் வேத வசனங்களை நெஞ்சம் நிறைய ஓதி ஓதி பாக்கியம் பெற்ற பென்னான நேரங்களும் நம் மனக்கண் முன் நிற்கின்றன.
இந்த இனிய நாட்களால் நாம் அடைந்த நன்மைகள் என்ன ?

لعلكم تتقون

லஅல்லகும் தத்தகூன் என இறைவன் ஆறு இடங்களில் கூறுகிறான். முன்னோர்களின் மீது நோன்மை விதியாக்கியது போல உங்கள் மீதும் நோன்பை விதியாக்கியிருக்கிறோம். (2:44) எனக்கூறிவிட்டு எதற்காக ? என்ற கேள்விக்கு “லஅல்லகும் தத்தகூன் நீங்கள் இறைவனை அஞ்சுவதற்காக ! தக்வா என்னும் அரிய பக்குவத்தை பெறுவதற்காக ” என விடையாக பதிலளிக்கறான் வல்ல நாயன். நோன்பின் நோக்கமே “தக்வா” என்னும் இறையச்சத்தை பெறுவது தான் என்பது மிகத் தெளிவாகிறது.
இப்போது நம்மைப் பார்த்துக் கேட்போம்:-
1. இறைவன் கூறிய அந்த தக்வாவை நாம் பெற்றுவிட்டோமா? அதற்குரிய அங்கீகாரம் நமக்குக் கிடைத்துவிட்டதா?
2. ரமளானிய பயிற்சிப்பள்ளியிலிருந்து ( شهادة المتقين ) “ஷஹதாத்துல் முத்தகீன்” “இறையச்சம் மிக்கவன்” என்ற சான்றிதழைப் பெற்று விட்டோமா?
3. அந்த ரமளானியப் பாடசாலையிலிருந்து பொறுமையைக் கற்றுவிட்டோமா? பாவங்களை விட்டொழித்து அல்லாஹ்வுக்கு முன் சரணடைந்து அவனுக்கு முற்றிலும் (தாஅத்) வழிபடும் பக்குவ நிலையைப் அடைந்து விட்டோமா?
4. உலக ஆசாபாசங்களுக்கு அடிமையாகாமல் நம்முடைய மனத்தை வென்று வெற்றி பெற்றுவிட்டோமா?
5. இவ்வளவு காலமாக பின்பற்றி வந்த சம்பிரதாயங்களுக்கும், சடங்குகளுக்கும், தீய பழக்கங்களுக்கும் விடை கொடுத்துவிட்டோமா? சாவு மணி அடித்துவிட்டோமா ?
6. அல்லாஹ்வின் அருளையும் அவனது மன்னிப்பையும் தொடர்ந்து பெற்றுவர ஆவனை செய்கிறோமா?
7. நரகவிடுதலையையும், சுவர்க்கத்தின் பேறுகளையும் பெறுவதற்கு அழுதழுது துஆக் கேட்டோமே? அந்த நிலை இன்னும் தொடருகிறதா? அவை இன்னும் நினைவிருக்கிறதா?
இவ்வாறு ஆயிரமாயிரம் கேள்விகள் நம் முன்னே எழுகின்றன. அதற்கான விடைகளை உண்மையான ஒவ்வொரு முஸ்லிமும் தமது நெங்சிலே கைவைத்து பதிலை கண்டறிய வேண்டும். அப்போது தான் நாம் ரமளானின் பயனை பெற்றவர்களாக ஆவோம்.
ரமளானின் உண்மையான பயன்களைப் பெறவில்லையென்றால் நாம் பசித்திருந்து விழித்திருந்து குர்ஆனை ஓதி வணங்கி வழிபட்டு என்ன பயன்?
நாம் நமது நிலையை மாற்றிக் கொள்ளவில்லையானால், நம்மை இன்னும் திருத்திக் கொள்ளவில்லையானால், ரமளானிலிருந்து பாடங்கள், படிப்பினைகள் பெறவில்லையானால் நாம் புனித மிகு ரமளானை அடைந்து என்ன பயன்? இந்தக் கேள்விகள் நியாயமானது தானா? நாம் விடை காண வேண்டாமா? இல்லையேல் நாம் நமது நாயனை ஏமாற்றியதாக ஆகாதா? சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
நாம் திருந்தாதவரை- நாம் நம்மை மாற்றிக் கொள்ளாதவரை- இறைவன் நம்மை மாற்றப் போவதில்லை. அல்லாஹ்வின் ஆணைகளை மதித்து பாவங்களிலிருந்து நம்மைத் திருத்திக் கொள்ளாதவரை நமக்கு விமோசனமில்லை.

إِنَّ اللّهَ لاَ يُغَيِّرُ مَا بِقَوْمٍ حَتَّى يُغَيِّرُواْ مَا بِأَنْفُسِهِمْ

எந்த சமுதாயமும் தம்மிடமுள்ளதை மாற்றிக் கொள்ளாதவரை அச்சமுதாயத்தில் உள்ளதை அல்லாஹ்வும் மாற்றமாட்டான். (13:11)
الوقفة الثانية இரண்டாவது நிலை

 {وَلاَ تَكُونُواْ كَالَّتِي نَقَضَتْ غَزْلَهَا مِن بَعْدِ قُوَّةٍ أَنكَاثاً (النحل92

(உங்கள் சத்தியங்களை முறிப்பதன் மூலம் ) உங்கள் நிலை, தானே சிரமப்பட்டு நூலை நூற்று பின்னர் நூற்றதை துண்டு துண்டாக ஆக்கிவிட்டாளே அத்தகைய பெண்ணின் நிலையைப் போன்று ஆகிவிடாதீர்கள். (16:92)
மக்காவிலுள்ள ரப்தா பின்த் ஸஅத் இப்னு தைம்,இவள் ஒரு (இம்ரஅத்துன் ஹம்கா ஃ முட்டாள் பெண். நாளெல்லாம் நூற்று அது முழுமையடையும்போது அதை துண்டு துண்டாக கிழித்தெறிவாள். எந்தக் காரணமும் இல்லாமல் தைத்த ஆடையை கிழித்தெறிவாள்;.மீண்டும் தப்பாள். மீண்டும் கிழிப்பாள்.இது தான் இவளது நிலை.
அது போல்தான் நம் மக்களின் நிலையும். வணக்கங்கள் செய்து முழுமையடைந்து பக்குவம் பெற்றதும் பழைய நிலைக்குச் சென்று விடுகின்றனர். பாவங்களின் பால் மீளுகின்றனர்.
நீங்கள் உண்மையிலே ரமளானில் நோன்பு நோற்று இறையச்சமுடையோரின் பண்புகளைப் பெற்று நோன்பும் நோற்று இரவிலே நின்று வணங்கி உங்கள் மனதை வென்றிருந்தால் அல்லாஹ்வை மனமாறப் புகழ்ந்து அவனுக்கு நன்றி செலுத்துவீர்கள். அந்த நாயனிடம் இறுதி மூச்சுவரை (துபாத்) ஸ்திரத்தன்மையை உறுதியோடிருக்க வேண்டுவீர்கள்!
ஸ்திரத்தன்மைக்குப் பிறகு உங்கள் போக்கை முறித்துக் கொண்டால் அந்த பெண்ணின் நிலை தான் உங்கள் நிலையும் என்று இறைவன் எச்சரிக்கிறான்.
ரமளானில் ஐவேளையும் ஜமாஅத்துடன் தொழுதவர்களை ஈதுடைய தொழுகைக்குப்பிறகு பார்க்க முடியவில்லை. தராவீஹ் என்னும் ஸுன்னத் தொழுகைக்கு அளித்து வந்த முக்கியத்துவத்தை பர்ளுத் தொழுகைக்குக் கொடுப்பதில்லை.
தொலைக்காட்சிகளைப் பார்க்காமல், சீரியல் நிகழ்ச்சிகளை ஏறிட்டும்; பார்க்காமல், பாட்டு ஆபாசக் காட்சிகளை மூட்டை கட்டிவைத்துக்கொண்டு ரமளானிலே ஐம்புலன்களையும் அடக்கிக் கொண்டவர்கள், ரமளான் முடிந்ததும் அந்த நினைவுகளை மறந்துவிட்டு மீண்டும் தொலைக்காட்சி முன்னால் பொழுதைத் தொலைத்துக் கொண்டிருப்பதைப் பார்க்கிறோம். பெருநாள் அன்றே வீட்டிலே படக்காட்சிகள் ஓடுகின்றன. தியேட்டர்களில் முஸ்லிம் ஆண்களும் பெண்களும் அலை மோதுகின்றனர்.திடல்களிலும், பூங்காக்களிலும் ஆடல், பாடல் நிகழ்சிகளும், கச்சேரிகளும், கேளிக்கைகளும் அரங்கேறிக் கொண்டிருக்கும்.
நாம் நோற்ற நோன்புக்கும், இரவுத் தொழுகைக்கும், திருமறையை ஓதியதற்கும் பரிசு தருவதற்காக ‘ வேலை செய்து முடித்தவர்களுக்கு நாம் என்ன கூலி வழங்க வேண்டும்? என இறைவன் வானவர்களைக் கேட்கும் போது’ “அவர்களுக்குரிய கூலியை முழுமையாக வழங்க வேண்டும்” என வானவர்கள் கூறுவார்கள்.
தேர்வு முடிவுக்காக காத்திருப்பது போல ரமளான் முடிவுக்காக காத்திருக்க வேண்டிய நாம் நமது வணக்கங்களையும் அமல்களையும் அல்லாஹ் அங்கிகரித்தானா இல்லையா? என ஏங்கி நிற்க வேண்டிய வேளையில் இவ்வாறு பொழுதைக் கழித்தால் நமது அமல்கள் எவ்வாறு கபூலாகும்? இறைவனால் அங்கீகருிக்கப்படும்.?
அந்தக் காலங்களில் ஆறுமாதங்கள் வரை நமது வணக்கங்களை அல்லாஹ் ஏற்றுக் கொள்ளவேண்டும் என அல்லாஹ்வின் நல்லடியார்கள்அழுது அரற்றிக்கொண்டிருப்பார்கள். அவர்கள் முன்னர் இருந்ததைவிடவும் மிகவும் பயந்து போய் உள்ளச்சத்தோடு அல்லாஹ்வின் அருளையும் புனிதத்துவத்தையும் எதிர்பாத்திருப்பார்கள்.

َ وَإِذْْ تَأَذَّنَ رَبُّكُمْ لَئِن شَكَرْتُمْ لأَزِيدَنَّكُمْ وَلَئِن كَفَرْتُمْ إِنَّ عَذَابِي لَشَدِيدٌ (إبراهيم)7)

நீங்கள் நன்றி செலுத்தினால் உங்களுக்கு அதிகமாக வழங்குவேன்.நீங்கள் நன்றி மறந்தால் எனது வேதனை கடுமையானது.என்று உங்கள் இறைவன் பிரகடனம் செய்ததை எண்ணிப் பாருங்கள்.(14:7)
அடியார்கள் அல்லாஹ் வழங்கிய பாக்கியங்களுக்’கு நன்றி செலுத்தினால் அல்லாஹ் அவர்களது இம்மை மறுமை வாழ்வில் அனைத்துப் பேறுகளையும் அதிகப்படுத்துவான். அதை அவர்கள் தம் வாழ்வில் நிதர்சனமாகவே காண்பர்கள். இதை எண்ணிப்பார்போர் பாவங்களிலிருந்த வெகு தூரம் சென்று விடுவர்.
الوقفة الثالثة முன்றாவது நிலை.
இஸதிகாமத் (நிரந்தர நிலை)

وَاعْبُدْ رَبَّكَ حَتَّى يَأْتِيَكَ الْيَقِينُ(الحجر99

மேலும் உங்கள் இரட்சகனை இறுதி மூச்சு (மரணம்) வரை வணங்கி வழிபடுவீராக! (15:99)
ஒரு அடியான் மார்க்க நெறிகளை கடை பிடிப்பதில் இறுதிவரை உறுதியாக இருக்க வேண்டும்.எல்லா காலங்களிலும், எல்லா இடங்களிலும் தவறாது பின் பற்றிவரவேண்டும். அது ரமளானாக இருக்கட்டும். ரமளான் அல்லாத காலமாக இருக்கட்டும்.அவன் உறுதியோடு மார்க்க நெறிகளைப் பின்பற்றி வரவேண்டும். ரமளானின் இறைவனே எல்லா மாதத்திற்கும் இறைவன். அவன் திருப்தியடையும் வகையில் நாம் நடந்து கொள்ளவேண்டும்.

{فَاسْتَقِمْ كَمَا أُمِرْتَ وَمَن تَابَ مَعَكَ وَلاَ تَطْغَوْاْ إِنَّهُ بِمَا تَعْمَلُونَ بَصِيرٌ }هود112

உமக்குக் கட்டளையிட்டவாறு நீரும் உம்முடன் இருப்போரும் உறுதியாக நில்லுங்கள். வரம்பு மீறாதீர்கள். நீங்கள் செய்வதை அவன் பார்ப்பவன். (11:112)

فَاسْتَقِيمُوا إِلَيْهِ وَاسْتَغْفِرُوهُ )فصلت(6

எனவே, அவன் பால் உறுதியாக இருங்கள். அவனிடம் மன்னிப்புத் தேடுங்கள். (41: 6)

قال صلي الله عليه وسلم قل آمنت بالله ثم استقم (رواه مسلم

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:-
அல்லாஹ்வை ஈமான் கொண்டோம் எனக் கூறுங்கள். பின்னர் அதில் உறுதியாகவும் இருங்கள். (முஸ்லிம்)
ஆறு நோன்பு
ரமளான் நோன்பு முடிந்தாலும் அதைத் தொடர்துந்து பல நபிலான நோன்புகளும் உள்ளன. ரமளானைத் தெடர்ந்து ஷவ்வாலில் ஆறு கோன்புகளை நோற்பதும், திங்கள்,வியாழன் இரவுகளிலும், அய்யாமுல் பீள் (பிரதி மாதம் 13,14,15)நாட்களிலும்,அரபா, ஆஷூ-ரா போன்ற நாட்களிலும் நோற்பது சிறப்பான வணக்கங்களாகும். அவற்றையும் நாம் ரமளானுக்குப்பிறகு தொடரவேண்டும்.
கியமுல்லைல் (இரவுத்) தொழுகை ரமளானில் மட்டுமல்ல. அவை மற்ற மாதங்களின் இரவுகளிலும் உள்ளன.அதையும் நாம் தொடரவேண்டும். நபி (ஸல்) அவர்கள் ரமளானிலும் ரமளான் அல்லாத காலங்களிலும் இரவுத்ததாழுகையை பதினொரு ரக்அத்களாகவும், 13 ரகஅத்களாகவும் தொழுது வந்துள்ளனர் என அன்னை ஆயிஷா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ( ஆதாரம் :புகாரி, முஸ்லிம்)
நபி (ஸல்) அவர்களைப் பின்பற்றி நாயகத்தோழர்களும் இரவெல்லாம் விழித்திருந்து தொழுததாக இறைவனே மனம் குளிர்ந்து கூறுகிறான்.

كَانُوا قَلِيلاً مِّنَ اللَّيْلِ مَا يَهْجَعُونَ وَبِالْأَسْحَارِ هُمْ يَسْتَغْفِرُونَ (الذاريات18

இரவில் குறைவாகவே தூங்கிக் கொண்டிருந்தனர். இரவின் கடைசி நேரங்களில் பாவமன்னிப்புத் தேடுவார்கள். (51:17,18)
ஸகாத், ஸதகாக்கள் முடிந்தாலும், மேலும் ஏனைய நாட்களிலும் தான தருமங்கள், இறைவழியில் செலவு செய்தல் போன்ற பல தர்மச் செயல்கள் உள்ளன.
குர்ஆன் ஓதுவதும் ஆராய்வதும் ரமளானில் மட்டுமல்ல. ஏனைய நாட்களிலும் உள்ளன.
நல்ல அமல்களும், வணக்கவழிபாடுகளும், ரமளானில் மட்டுமல்ல,, எல்லாக் காலங்களிலும் தொடர்ந்து செய்து கொண்டே இருக்க வேண்டும்.
எல்லாச் சொல், செயல்களிலும் ஹலால். ஹராமைப் பேணவேண்டும். உண்ணுதல் பருகுதல், கொடுக்கல் வாங்கல்,வர்த்தகப் பொருட்கள் போன்றவறறிலும் ஹராம்-பாவம்- கலவாது பாதுகாக்கவேண்டும். மார்க்கத்தை எல்லா நிலைகளிலும் பேணி நமது ஈமானை காத்துக் கொள்ளவேண்டும். நாம் பாவச்செயல்களிலே ஈடுபட்டிருக்கும் போது மலக்குல் மவ்த்து (மரண தூதர்) நம்மிடம் வந்துவிடக்கூடும் என்பதை எண்ணி எச்சரிக்கையாக இருங்கள்.

اللهم يا مقلب القلوب ثبت قلوبنا علي دينك

யாஅல்லாஹ்! இதயங்களை இயக்குபவனே! எங்கள் இதயங்களை உனது மார்க்கத்தில் நிலைத்திருக்கச் செய்வாயாக!
الخاتامة முடிவுரை

وَمَا تَفْعَلُواْ مِنْ خَيْرٍ يَعْلَمْهُ اللّهُ وَتَزَوَّدُواْ فَإِنَّ خَيْرَ الزَّادِ التَّقْوَى وَاتَّقُونِ يَا أُوْلِي الأَلْبَابِ (البقرة197

நீங்கள் செய்யும் நன்மையான செயல்கள் அனைத்தையும் அல்லாஹ் அறிபவனாக உள்ளான். எனவே, (உங்களுக்கு கிடைத்த அரிய சந்தர்பத்தை) மகத்தானதாக ஆக்கிக் கொள்ளுங்கள். ஏனெனில் உங்கள் தயாரிப்புகளில் மிகச் சிறந்தது தக்வா இறையச்சமே ஆகும். அறிவுடையோரே! அல்லாஹ்வை (எப்போதும்) அஞ்சிக் கொள்ளங்கள். (2:197)
இக்லாசான -தூய -வணக்கங்களும் இறையச்சமும் (தக்வாவும்) தான் ரமளானில் நாம் பெறும் மகத்தான பயன்கள்.

Thursday, 22 September 2011

புகை.....பகை..!!

அஸ்ஸலாமு அலைக்கும்!


நீங்கள் புகை பிடிப்பவரா?

அப்படியானால் இது உங்களுக்குத்தான்.

புகையிலையில் உள்ள நிகோடின் பல்வேறு விதமான நோய்களுக்கு அச்சாரம் போடுகிறது. குறிப்பாக, புற்றுநோய் ஏற்பட புகைப்பழக்கம் முக்கியமான காரணம். அதனால் அப்பழக்கத்தைத் தவிர்த்துவிடுவதே நல்லது.

உலக சுகாதார நிறுவனம் (who) புகைப்பிடிக்கும் பழக்கத்துக்கு எதிராக உலகம் முழுவதும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.

ஒரு குறிப்பிட்ட வயதுக்குப் பின்னர்தான் இப்பழக்கத்திற்கு மனிதர்கள் அடிமையாகின்றார். அதனால், போதிய ஆலோசனைகள் கொடுத்து புகைப்பழக்கத்தை நிறுத்த முடியும் என்பது நிபுணர்களின் நம்பிக்கை.



 புகைபிடிக்கும் .
                   பழக்கத்தை மறக்க சில யோசனைகள்
:

புத்தாண்டு முதல் அல்லது வரும் பெர்த்டேயிலிருந்து சிகரெட் பிடிப்பதை நான் நிறுத்திவிடுவேன் என்று நண்பர்களிடம் சிலர் சவால் விடுவதைப் பார்த்திருப்பீர்கள். ஆனால் புத்தாண்டும் வந்து பார்த்டேயும் வந்து போயிருக்கும். சிகரெட் பிடிப்பதை மட்டும் நிறுத்தியிருக்க மாட்டார்கள். இப்படி கெடு வைத்து நிறுத்த முயற்சிப்பவர்கள் புகை பிடிக்கும் பழக்கத்தை நிறுத்துவது கடினம்.

புகை பிடிப்பதை நிறுத்தப்போகிறேன் என்று இந்நிமிடத்தில் இருந்து தூக்கிப்போட வேண்டும். மறுநாள் காலை சிகரெட் பிடிக்கவேண்டும் என்ற அரிப்பு எழும். அந்த நிமிடங்களை வன்முறையாகத்தான் அடக்கியாள வேண்டும்.

சிகரெட் பிடிக்கவேண்டும் என்ற சிந்தனை எழும்போதெல்லாம் முடியாது என்று உங்களுக்கு நீங்களே வேகமாக மறுக்கவேண்டும். மனம் சமாதானமடையும்.

ஒரு மணி நேரம் கழித்து மீண்டும் அந்த உந்துதல் எழும். இன்று ஒருநாள் மட்டும் பிடிப்போம். நாளையிலிருந்து விட்டுவிடுவோம் என்ற எண்ணம் தலை தூக்கும். உனக்கு சிகரெட் இல்லை. முடியாது, நீ எப்படிக் கெஞ்சினாலும் உனக்கு சிகரெட் கிடையாது. உனக்குத் தரப்படாது என்று உங்கள் மனதோடு நீங்களே போராட வேண்டியதிருக்கும். அந்த நிமிடத்திற்கு நீங்கள்தான் ஜெயிப்பீர்கள். உடனே, காலையில் முக்கியமாகப் பார்க்கவேண்டிய வேலை என்ன என்று தேடிப்போய்விட வேண்டும். மதியம் உணவு இடைவேளைக்குப் பிறகு கொஞ்சம் ஓய்வு கிடைக்கலாம். மதிய உணவு சாப்பிட்டபின் சிகரெட் பிடித்துப் பழகியதால், அந்த ஓய்வு நேரத்தில் சிகரெட் பிடிக்கலாம் என்ற எண்ணம் எழும்.

கொஞ்சமும் மசிந்து கொடுக்கக் கூடாது. ஓய்வு நேரத்தில் ஏதாவது வேலையைத் தேடி ஓடுங்கள். உறவினரையோ, குடும்பத்தாரையோ, மேலதிகாரிகளையோ மரியாதைக்குரியவர்களையோ சந்திக்கும் வேலையாகக் கூட அதை உருவாக்கிக் கொள்ளுங்கள். மரியாதைக்காக அவர்களைச் சந்திக்கும்போது புகை பிடிக்க வேண்டாம் என்று மனம் சொல்லும். இப்படி ஏதாவது ஒரு வேலைக்குள் நீங்கள் உங்களைச் சிக்க வைத்துக் கொண்டாலே பிற்பகல் எண்ணத்தை நீங்கள் தூக்கி எறிந்து விடலாம்.

அன்றைய இரவுதான் உங்களைப் படுத்தி எடுக்கும். ஒரே ஒரு தம் மட்டும் இழுத்துக்கொள்வோம் என்று மனம் சொல்லும். புகை நாற்றத்தில் ஊறிய வாய் நமநமக்கும். ரத்தத்துடன் கலந்துவிட்ட நிகோடின் உங்களுக்கு எதிராக மனத்தைத் தூண்டிவிடும். எப்படியாவது ஒரே ஒரு சிகரெட் இன்று இரவு மட்டும். நாளையிலிருந்து வேண்டாம் என்றெல்லாம் நீங்களே கூட நினைக்கக்கூடும்.

அடக்குங்கள். உங்களையும் உங்கள் மனதையும். அன்று இரவு கழிந்துவிட்டது. இரண்டாம் நாள் கொஞ்சம் கொஞ்சமாக எண்ணம் தலை தூக்க ஆரம்பிக்கும். முடியாது. வேண்டாம்  என்று அடக்கிவிட்டு அன்றைய பிரச்னைகளில் அலுவல்களில் வழக்கத்துக்கு முன்பே இறங்கிவிடுங்கள்.

மூன்றாம் நாள், நான்காம் நாள் என்று ஒரு எட்டு நாளைக்கு அடக்கிப் பாருங்கள். அடங்கியிருங்கள். நீங்கள் எட்டு நாள் வெற்றி பெற்ற மமதையில் இருப்பீர்கள். எட்டு நாள்தான் ஒரு மனிதனின் பழக்கவழக்கத்திலிருந்து மாறும் காலக்கெடு. எட்டு நாள் கடந்துவிட்டால் (ஒரு சிகரெட் கூட, ஒரு தம் கூட இழுக்காமல்) உங்களால் சிகரெட் பழக்கத்தை முற்றிலும் நிறுத்தமுடியும். இது உறுதி.

செயின் ஸ்மோக்கர் என்பதால் ரத்தத்தில் உள்ள நிக்கோடின் எப்படியும் சிகரெட் பிடிக்க வைத்துவிடும் என்றெல்லாம் நண்பர்கள் உசுப்பேற்றுவார்கள். அவர்களை அலட்சியப்படுத்துங்கள். எட்டு நாளைக்குப் பிறகு உங்களால் வாழ்நாள் முழுவதும் சிகரெட் பிடிக்காமல் இருக்க இந்த அடக்கியாளும் உத்தி உதவும்.

இவையன்றி கீழே உள்ள சில யோசனைகள் உங்களுக்கு உதவக்கூடும்.

றீ மற்றவர்கள் புகை பிடித்துக்கொண்டு இருந்தால், அந்த இடத்தை விட்டு அகன்று விடுங்கள். புகை அலர்ஜி என்று அவர்களிடம் எடுத்துச் சொல்லுங்கள்.

றீ சூயிங்கம், நிகோடின் பேட்ஜ்கள் போன்றவற்றை உபயோகிக்கலாம். மூக்கு வழியாக உள்ளிழுக்கும் ‘ஸ்பிரே’யைப் பயன்படுத்தியும் புகைப்பழக்கத்தைத் தவிர்க்கலாம். இவற்றைப் பயன்படுத்த ஆரம்பித்த பின்னர், பயன்களை முழுமையாக உணரமுடியும்.

றீ சிகரெட்டிற்குப் பதிலாக, காபி, டீ, ஜூஸ் போன்ற பானங்களைக் குடிக்கலாம். புகை பிடிக்க வேண்டும் என்ற உணர்வு மேலோங்கும்போது இவற்றை அருந்தலாம்.

றீ குழந்தைகளுடன் விளையாடலாம். கொஞ்ச தூரம் நடக்கலாம். கைகளில் ‘க்ளோவுஸ்’ மாட்டிக்கொண்டால் சிகரெட் பிடிக்கவேண்டும் என்ற உந்துதல் வராது.

றீ காலையில் யோகா, மாலை வாக்கிங், முற்பகல் மந்திர ஜபம், பிற்பகல் தியானம் என்று ஒரு வரையறுக்கப்பட்ட வாழ்க்கை முறையை நமக்கு நாமே ஏற்படுத்திக்கொண்டால் நிச்சயம் புகை பிடிப்பதை மறக்க முடியும்.

றீ எல்லாவற்றையும்விட புகை பிடிப்பதால் ஏற்படும் தொந்தரவு, சந்ததியினருக்கு வரும் பிரச்னைகள் ஆகியவற்றை மனதில் கொண்டு, இந்த தொந்தரவு நமக்கு அவசியம்தானா என்று விலகிவிடுவது உத்தமம். புகை ஒரு விஷம் என்ற உணர்வை ஏற்படுத்திக் கொண்டால் விடுதலை நிச்சயம்.

Saturday, 10 September 2011

இஸ்லாம் கூறும் அடிப்படை!

இஸ்லாம் கூறும் அடிப்படை வணக்கங்களில் நோன்பு
பிரதானமான தொன்றாகும். மனித ஆன்ம பரிசுத்தத்திற்கு வழி வகுக்கும் இவ்வணக்கத்தை மேற்கொள்ளும் ஒருவரின் உள்ளத்தில் எழக்கூடிய ஐயங்கள் எவை என யூகித்து அவற்றைத் தெளிவுபடுத்துமுகமாக இவ்வாக்கம் எழுதப்படுகின்றது.



சந்தேகம்:-
அனைத்து இபாதத்துக்களும் “நிய்யத்” அவசியமானது. நோன்பிற்கும் “நிய்யத்” அவசியமானதே. நோன்பின் நிய்யத் எனக் கூறப்படும் வாசகங்கள் ஆதாரபூர்வமானவைதாமா?

தெளிவு:-
“நிய்யத்” என்றால் “எண்ணங்கொள்ளல்” என்பதே அர்த்தமாகும். “நிய்யத்தை” வாயால் மொழிதல் கூடாது. எந்த இறை வணக்கத்தைச் செய்தாலும், அல்லாஹ்வுக்காக செய்கின்றேன் என்ற இஹ்லாஸான எண்ணத்துடன் செய்வதையே இஸ்லாம் வலியுறுத்துகின்றது.
நோன்பின் நிய்யத் என நபி(ஸல்) அவர்கள், குறிப்பிட்ட ஏதேனும் வாசகங்களைக் கற்றுத் தந்துள்ளார்களா? என வினவினால் அனைத்து ஹதீஸ்களும் “இல்லை” எனத் தலையசைக்கின்றன. “நவைத்து ஸவ்மகதின் அன் அதாயி பர்ழி ரமழான ஹாதிஹிஸ் ஸனதி லில்லாஹித் தஆலா” என்ற நோன்பு நிய்யத் (?) வாசகங்கள் ஒரு ஹதீஸ் கிரந்தத்தில் கூட இடம்பெறவில்லை. (வேண்டுமானால் உலமாக்களிடம், இந்த வாசகங்கள் எந்த ஹதீஸ் கிரந்தத்தி;ல் இடம்பெற்றுள்ளது என்று கேட்டுப் பாருங்கள். அவர்கள் நழுவுவதை நீங்களே காண்பீர்கள்) ஹதீஸ்களில் இல்லாத இந்த துஆவை மக்கள் கூறும் விதத்திலும், இந்த துஆவின் வாசகங்களிலும் அநேக தவறுகள் உள்ளன.
தராவீஹ் தொழுது முடிந்தவுடன் இமாம் இந்த துஆவை (?) மஃமூனுக்குச் சொல்லிக் கொடுப்பார். இமாம் இதை அரபியிலும் கூறி பொருளையும் தமிழில் கூற மஃமூம்களும் வழிமொழிவர். நிய்யத் இரு மொழிகளில் கூற வேண்டுமா? மக்களுக்கு அரபியில் சொல்ல (?) முடியுமென்றால் தமிழ் தேவையில்லை. அல்லாஹ்வுக்குத் தமிழ் தெரியாது; மக்களுக்கு அரபு புரியாது என்ற தவறான எண்ணம் அடி மனதில் இருப்பதனால் தானோ என்னவோ இவர்கள் இரு மொழிகளிலும் சொல்லிக் கொடுக்கின்றனர்.

சில இடங்களில் அரபியிலும், தமிழிலும் மும்மூன்று விடுத்தங்கள் சொல்லிக் கொடுப்பர். தெரியாதவர்களுக்குச் சொல்லிக் கொடுக்கின்றோம் என்று சமாளிக்க முடியாத அளவுக்கு சின்னஞ் சிறுசுகளின் உள்ளங்களில் கூட இந்த துஆ ஆழப் பதிந்துள்ளது. தொழுகைக்கும் அரபு, தமிழ் என்று ஆறுவிடுத்தம் இவர்கள் “நிய்யத்”துச் சொல்லுவார்களோ?
ஆதாரமில்லாத நிய்யத்தை அர்த்தமற்ற விதத்தில் சொல்லிக் கொடுக்கின்றனர். சொல்லப்படும் வாசகங்களாவது தவறில்லாமல் இருக்கக்கூடாதா? “இந்த வருடத்தின் றமழான் மாதத்தின் பர்ழான நோன்பை அதாவாக நாளை பிடிக்க நிய்யத்துச் செய்கிறேன். அல்லாஹ்வுக்காக!” எனச் சொல்லப்படுகின்றது.

றமழான் மாதத்தில் நோன்பு நோற்கும் ஒருவன் சென்ற வருடத்து நோன்பையோ, வருகின்ற வருட நோன்பையோ நோற்கப் போவதில்லை. எனவே, “இந்த வருடத்தின் றமழான் மாதத்தின்” என்ற வார்த்தை அர்த்தமற்றதாகின்றது. “பர்ழான நோன்பை” என்ற அடுத்த வாசம்கூட றமழான் மாதத்தில் சுன்னத்தான நோன்பு இல்லை என்பதால் தேவையற்ற ஒன்றாகின்றது.

அடுத்து “நாளை பிடிக்க” நிய்யத்துச் செய்கிறேன் என்று சொல்லப்படுகின்றது. நாளை எதையேனும் செய்வேன் எனக் கூறுவதாயின் “இன்ஷா அல்லாஹ்” என்ற வாசகத்தை இணைத்தே கூற வேண்டும் என்ற சின்ன விடயம் கூட “துஆ”க் கண்டு பிடிப்பாளருக்கோ, அதை அணுவும் பிசகாது நடைமுறைப் படுத்தும் ஆலிம்களுக்கோ தெரியாமல் போனது ஆச்சரியம் தான்.
மேலும் ஒரு விபரீதம் நிகழ்வதையும் நாம் சுட்டிக்காட்ட வேண்டும். எல்லா முஸ்லிம்களும் ஸஹரில் சாப்பிட்டு விட்டு “நாளை நோன்பு பிடிக்க நிய்யத்துச் செய்கிறேன்” (அதாவது இன்று நான் நோன்பு பிடிக்கவில்லை) என்று கூறிவிடுகின்றனர். இது எவ்வளவு விபரீதமான வார்த்தை? இதை உலமாக்களும் கண்டு கொள்வதில்லை; மக்களும் சிந்திப்பதில்லை. மக்கள் எதை எதிர்பார்க்கின்றார்களோ அதை அப்படியே செய்வதை உலமாக்களும், உலமாக்கள் எதைச் செய்தாலும் அது பற்றி சிந்தனை செய்யாது பின்பற்றுவதைப் பொது மக்களும் வழமையாகக் கொண்டுள்ளனர். சாதாரண தமிழ் அறிவுள்ளவன் கூட இந்த “துஆ” தவறானது என்பதை அறியமுடியுமல்லவா?

இறுதியாக “அல்லாஹ்வுக்காக” என்று சொல்லப்படுகின்றது. நோன்பின் நிய்யத் என்று சொல்லப்படும் வார்த்தைகளிலே இது ஒன்று மாத்திரம் தான் அர்த்தமுள்ளதாக உள்ளது. எனவே, “நோன்பை அல்லாஹ்வுக்காக நோற்கிறேன்” என்ற எண்ணத்துடன் மாத்திரம் நோற்போமாக!