وماذا بعد رمضان ؟
ரமளானுக்குப் பிறகு நமது நிலை என்ன?இவற்றை நாம் அலசிப் பார்ப்பது நமது தலையாய இன்றைய கடமையாகும். நமது நிலையயை மூன்றாகப் பிரிக்கவாம்.
الوقفة الأولي முதல் நிலை
ماذا استفدنا من رمضان؟
ரமளான் மூலம் நாம் அடைந்த பயன் என்ன?புனித ரமளானிலிருந்து நாம் விடைபெற்று விட்டோம். குர்ஆன் அருளப்பட்ட மாதம்! (தக்வா) இறையச்சத்தையும், (ஸப்று) பொறுமையையும், (ஜிஹாத்) மனத்தை வெல்லும் போராட்டத் தையும்,( ரஹ்மத்) இறைவனின் அருளையும், (மக்பிரத்) அவனின் மன்னிப்பையும், இன்னும் பல அருட்பேறுகளையும், பக்குவ நிலையையும் பெற்றுத்தந்த அரிய மாதம்.
பகலெல்லாம் நோன்பிருந்த அந்த மாண்பார் நாட்களும் இரவெல்லாம் நின்று வணங்கிய பசுமையான நினைவுகளும் இறைவனின் வேத வசனங்களை நெஞ்சம் நிறைய ஓதி ஓதி பாக்கியம் பெற்ற பென்னான நேரங்களும் நம் மனக்கண் முன் நிற்கின்றன.
இந்த இனிய நாட்களால் நாம் அடைந்த நன்மைகள் என்ன ?
لعلكم تتقون
லஅல்லகும் தத்தகூன் என இறைவன் ஆறு இடங்களில் கூறுகிறான். முன்னோர்களின் மீது நோன்மை விதியாக்கியது போல உங்கள் மீதும் நோன்பை விதியாக்கியிருக்கிறோம். (2:44) எனக்கூறிவிட்டு எதற்காக ? என்ற கேள்விக்கு “லஅல்லகும் தத்தகூன் நீங்கள் இறைவனை அஞ்சுவதற்காக ! தக்வா என்னும் அரிய பக்குவத்தை பெறுவதற்காக ” என விடையாக பதிலளிக்கறான் வல்ல நாயன். நோன்பின் நோக்கமே “தக்வா” என்னும் இறையச்சத்தை பெறுவது தான் என்பது மிகத் தெளிவாகிறது.இப்போது நம்மைப் பார்த்துக் கேட்போம்:-
1. இறைவன் கூறிய அந்த தக்வாவை நாம் பெற்றுவிட்டோமா? அதற்குரிய அங்கீகாரம் நமக்குக் கிடைத்துவிட்டதா?
2. ரமளானிய பயிற்சிப்பள்ளியிலிருந்து ( شهادة المتقين ) “ஷஹதாத்துல் முத்தகீன்” “இறையச்சம் மிக்கவன்” என்ற சான்றிதழைப் பெற்று விட்டோமா?
3. அந்த ரமளானியப் பாடசாலையிலிருந்து பொறுமையைக் கற்றுவிட்டோமா? பாவங்களை விட்டொழித்து அல்லாஹ்வுக்கு முன் சரணடைந்து அவனுக்கு முற்றிலும் (தாஅத்) வழிபடும் பக்குவ நிலையைப் அடைந்து விட்டோமா?
4. உலக ஆசாபாசங்களுக்கு அடிமையாகாமல் நம்முடைய மனத்தை வென்று வெற்றி பெற்றுவிட்டோமா?
5. இவ்வளவு காலமாக பின்பற்றி வந்த சம்பிரதாயங்களுக்கும், சடங்குகளுக்கும், தீய பழக்கங்களுக்கும் விடை கொடுத்துவிட்டோமா? சாவு மணி அடித்துவிட்டோமா ?
6. அல்லாஹ்வின் அருளையும் அவனது மன்னிப்பையும் தொடர்ந்து பெற்றுவர ஆவனை செய்கிறோமா?
7. நரகவிடுதலையையும், சுவர்க்கத்தின் பேறுகளையும் பெறுவதற்கு அழுதழுது துஆக் கேட்டோமே? அந்த நிலை இன்னும் தொடருகிறதா? அவை இன்னும் நினைவிருக்கிறதா?
இவ்வாறு ஆயிரமாயிரம் கேள்விகள் நம் முன்னே எழுகின்றன. அதற்கான விடைகளை உண்மையான ஒவ்வொரு முஸ்லிமும் தமது நெங்சிலே கைவைத்து பதிலை கண்டறிய வேண்டும். அப்போது தான் நாம் ரமளானின் பயனை பெற்றவர்களாக ஆவோம்.
ரமளானின் உண்மையான பயன்களைப் பெறவில்லையென்றால் நாம் பசித்திருந்து விழித்திருந்து குர்ஆனை ஓதி வணங்கி வழிபட்டு என்ன பயன்?
நாம் நமது நிலையை மாற்றிக் கொள்ளவில்லையானால், நம்மை இன்னும் திருத்திக் கொள்ளவில்லையானால், ரமளானிலிருந்து பாடங்கள், படிப்பினைகள் பெறவில்லையானால் நாம் புனித மிகு ரமளானை அடைந்து என்ன பயன்? இந்தக் கேள்விகள் நியாயமானது தானா? நாம் விடை காண வேண்டாமா? இல்லையேல் நாம் நமது நாயனை ஏமாற்றியதாக ஆகாதா? சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
நாம் திருந்தாதவரை- நாம் நம்மை மாற்றிக் கொள்ளாதவரை- இறைவன் நம்மை மாற்றப் போவதில்லை. அல்லாஹ்வின் ஆணைகளை மதித்து பாவங்களிலிருந்து நம்மைத் திருத்திக் கொள்ளாதவரை நமக்கு விமோசனமில்லை.
إِنَّ اللّهَ لاَ يُغَيِّرُ مَا بِقَوْمٍ حَتَّى يُغَيِّرُواْ مَا بِأَنْفُسِهِمْ
எந்த சமுதாயமும் தம்மிடமுள்ளதை மாற்றிக் கொள்ளாதவரை அச்சமுதாயத்தில் உள்ளதை அல்லாஹ்வும் மாற்றமாட்டான். (13:11)الوقفة الثانية இரண்டாவது நிலை
{وَلاَ تَكُونُواْ كَالَّتِي نَقَضَتْ غَزْلَهَا مِن بَعْدِ قُوَّةٍ أَنكَاثاً (النحل92
(உங்கள் சத்தியங்களை முறிப்பதன் மூலம் ) உங்கள் நிலை, தானே சிரமப்பட்டு நூலை நூற்று பின்னர் நூற்றதை துண்டு துண்டாக ஆக்கிவிட்டாளே அத்தகைய பெண்ணின் நிலையைப் போன்று ஆகிவிடாதீர்கள். (16:92)மக்காவிலுள்ள ரப்தா பின்த் ஸஅத் இப்னு தைம்,இவள் ஒரு (இம்ரஅத்துன் ஹம்கா ஃ முட்டாள் பெண். நாளெல்லாம் நூற்று அது முழுமையடையும்போது அதை துண்டு துண்டாக கிழித்தெறிவாள். எந்தக் காரணமும் இல்லாமல் தைத்த ஆடையை கிழித்தெறிவாள்;.மீண்டும் தப்பாள். மீண்டும் கிழிப்பாள்.இது தான் இவளது நிலை.
அது போல்தான் நம் மக்களின் நிலையும். வணக்கங்கள் செய்து முழுமையடைந்து பக்குவம் பெற்றதும் பழைய நிலைக்குச் சென்று விடுகின்றனர். பாவங்களின் பால் மீளுகின்றனர்.
நீங்கள் உண்மையிலே ரமளானில் நோன்பு நோற்று இறையச்சமுடையோரின் பண்புகளைப் பெற்று நோன்பும் நோற்று இரவிலே நின்று வணங்கி உங்கள் மனதை வென்றிருந்தால் அல்லாஹ்வை மனமாறப் புகழ்ந்து அவனுக்கு நன்றி செலுத்துவீர்கள். அந்த நாயனிடம் இறுதி மூச்சுவரை (துபாத்) ஸ்திரத்தன்மையை உறுதியோடிருக்க வேண்டுவீர்கள்!
ஸ்திரத்தன்மைக்குப் பிறகு உங்கள் போக்கை முறித்துக் கொண்டால் அந்த பெண்ணின் நிலை தான் உங்கள் நிலையும் என்று இறைவன் எச்சரிக்கிறான்.
ரமளானில் ஐவேளையும் ஜமாஅத்துடன் தொழுதவர்களை ஈதுடைய தொழுகைக்குப்பிறகு பார்க்க முடியவில்லை. தராவீஹ் என்னும் ஸுன்னத் தொழுகைக்கு அளித்து வந்த முக்கியத்துவத்தை பர்ளுத் தொழுகைக்குக் கொடுப்பதில்லை.
தொலைக்காட்சிகளைப் பார்க்காமல், சீரியல் நிகழ்ச்சிகளை ஏறிட்டும்; பார்க்காமல், பாட்டு ஆபாசக் காட்சிகளை மூட்டை கட்டிவைத்துக்கொண்டு ரமளானிலே ஐம்புலன்களையும் அடக்கிக் கொண்டவர்கள், ரமளான் முடிந்ததும் அந்த நினைவுகளை மறந்துவிட்டு மீண்டும் தொலைக்காட்சி முன்னால் பொழுதைத் தொலைத்துக் கொண்டிருப்பதைப் பார்க்கிறோம். பெருநாள் அன்றே வீட்டிலே படக்காட்சிகள் ஓடுகின்றன. தியேட்டர்களில் முஸ்லிம் ஆண்களும் பெண்களும் அலை மோதுகின்றனர்.திடல்களிலும், பூங்காக்களிலும் ஆடல், பாடல் நிகழ்சிகளும், கச்சேரிகளும், கேளிக்கைகளும் அரங்கேறிக் கொண்டிருக்கும்.
நாம் நோற்ற நோன்புக்கும், இரவுத் தொழுகைக்கும், திருமறையை ஓதியதற்கும் பரிசு தருவதற்காக ‘ வேலை செய்து முடித்தவர்களுக்கு நாம் என்ன கூலி வழங்க வேண்டும்? என இறைவன் வானவர்களைக் கேட்கும் போது’ “அவர்களுக்குரிய கூலியை முழுமையாக வழங்க வேண்டும்” என வானவர்கள் கூறுவார்கள்.
தேர்வு முடிவுக்காக காத்திருப்பது போல ரமளான் முடிவுக்காக காத்திருக்க வேண்டிய நாம் நமது வணக்கங்களையும் அமல்களையும் அல்லாஹ் அங்கிகரித்தானா இல்லையா? என ஏங்கி நிற்க வேண்டிய வேளையில் இவ்வாறு பொழுதைக் கழித்தால் நமது அமல்கள் எவ்வாறு கபூலாகும்? இறைவனால் அங்கீகருிக்கப்படும்.?
அந்தக் காலங்களில் ஆறுமாதங்கள் வரை நமது வணக்கங்களை அல்லாஹ் ஏற்றுக் கொள்ளவேண்டும் என அல்லாஹ்வின் நல்லடியார்கள்அழுது அரற்றிக்கொண்டிருப்பார்கள். அவர்கள் முன்னர் இருந்ததைவிடவும் மிகவும் பயந்து போய் உள்ளச்சத்தோடு அல்லாஹ்வின் அருளையும் புனிதத்துவத்தையும் எதிர்பாத்திருப்பார்கள்.
َ وَإِذْْ تَأَذَّنَ رَبُّكُمْ لَئِن شَكَرْتُمْ لأَزِيدَنَّكُمْ وَلَئِن كَفَرْتُمْ إِنَّ عَذَابِي لَشَدِيدٌ (إبراهيم)7)
நீங்கள் நன்றி செலுத்தினால் உங்களுக்கு அதிகமாக வழங்குவேன்.நீங்கள் நன்றி மறந்தால் எனது வேதனை கடுமையானது.என்று உங்கள் இறைவன் பிரகடனம் செய்ததை எண்ணிப் பாருங்கள்.(14:7)அடியார்கள் அல்லாஹ் வழங்கிய பாக்கியங்களுக்’கு நன்றி செலுத்தினால் அல்லாஹ் அவர்களது இம்மை மறுமை வாழ்வில் அனைத்துப் பேறுகளையும் அதிகப்படுத்துவான். அதை அவர்கள் தம் வாழ்வில் நிதர்சனமாகவே காண்பர்கள். இதை எண்ணிப்பார்போர் பாவங்களிலிருந்த வெகு தூரம் சென்று விடுவர்.
الوقفة الثالثة முன்றாவது நிலை.
இஸதிகாமத் (நிரந்தர நிலை)
وَاعْبُدْ رَبَّكَ حَتَّى يَأْتِيَكَ الْيَقِينُ(الحجر99
மேலும் உங்கள் இரட்சகனை இறுதி மூச்சு (மரணம்) வரை வணங்கி வழிபடுவீராக! (15:99)ஒரு அடியான் மார்க்க நெறிகளை கடை பிடிப்பதில் இறுதிவரை உறுதியாக இருக்க வேண்டும்.எல்லா காலங்களிலும், எல்லா இடங்களிலும் தவறாது பின் பற்றிவரவேண்டும். அது ரமளானாக இருக்கட்டும். ரமளான் அல்லாத காலமாக இருக்கட்டும்.அவன் உறுதியோடு மார்க்க நெறிகளைப் பின்பற்றி வரவேண்டும். ரமளானின் இறைவனே எல்லா மாதத்திற்கும் இறைவன். அவன் திருப்தியடையும் வகையில் நாம் நடந்து கொள்ளவேண்டும்.
{فَاسْتَقِمْ كَمَا أُمِرْتَ وَمَن تَابَ مَعَكَ وَلاَ تَطْغَوْاْ إِنَّهُ بِمَا تَعْمَلُونَ بَصِيرٌ }هود112
உமக்குக் கட்டளையிட்டவாறு நீரும் உம்முடன் இருப்போரும் உறுதியாக நில்லுங்கள். வரம்பு மீறாதீர்கள். நீங்கள் செய்வதை அவன் பார்ப்பவன். (11:112)فَاسْتَقِيمُوا إِلَيْهِ وَاسْتَغْفِرُوهُ )فصلت(6
எனவே, அவன் பால் உறுதியாக இருங்கள். அவனிடம் மன்னிப்புத் தேடுங்கள். (41: 6)قال صلي الله عليه وسلم قل آمنت بالله ثم استقم (رواه مسلم
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:-அல்லாஹ்வை ஈமான் கொண்டோம் எனக் கூறுங்கள். பின்னர் அதில் உறுதியாகவும் இருங்கள். (முஸ்லிம்)
ஆறு நோன்பு
ரமளான் நோன்பு முடிந்தாலும் அதைத் தொடர்துந்து பல நபிலான நோன்புகளும் உள்ளன. ரமளானைத் தெடர்ந்து ஷவ்வாலில் ஆறு கோன்புகளை நோற்பதும், திங்கள்,வியாழன் இரவுகளிலும், அய்யாமுல் பீள் (பிரதி மாதம் 13,14,15)நாட்களிலும்,அரபா, ஆஷூ-ரா போன்ற நாட்களிலும் நோற்பது சிறப்பான வணக்கங்களாகும். அவற்றையும் நாம் ரமளானுக்குப்பிறகு தொடரவேண்டும்.
கியமுல்லைல் (இரவுத்) தொழுகை ரமளானில் மட்டுமல்ல. அவை மற்ற மாதங்களின் இரவுகளிலும் உள்ளன.அதையும் நாம் தொடரவேண்டும். நபி (ஸல்) அவர்கள் ரமளானிலும் ரமளான் அல்லாத காலங்களிலும் இரவுத்ததாழுகையை பதினொரு ரக்அத்களாகவும், 13 ரகஅத்களாகவும் தொழுது வந்துள்ளனர் என அன்னை ஆயிஷா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ( ஆதாரம் :புகாரி, முஸ்லிம்)
நபி (ஸல்) அவர்களைப் பின்பற்றி நாயகத்தோழர்களும் இரவெல்லாம் விழித்திருந்து தொழுததாக இறைவனே மனம் குளிர்ந்து கூறுகிறான்.
كَانُوا قَلِيلاً مِّنَ اللَّيْلِ مَا يَهْجَعُونَ وَبِالْأَسْحَارِ هُمْ يَسْتَغْفِرُونَ (الذاريات18
இரவில் குறைவாகவே தூங்கிக் கொண்டிருந்தனர். இரவின் கடைசி நேரங்களில் பாவமன்னிப்புத் தேடுவார்கள். (51:17,18)ஸகாத், ஸதகாக்கள் முடிந்தாலும், மேலும் ஏனைய நாட்களிலும் தான தருமங்கள், இறைவழியில் செலவு செய்தல் போன்ற பல தர்மச் செயல்கள் உள்ளன.
குர்ஆன் ஓதுவதும் ஆராய்வதும் ரமளானில் மட்டுமல்ல. ஏனைய நாட்களிலும் உள்ளன.
நல்ல அமல்களும், வணக்கவழிபாடுகளும், ரமளானில் மட்டுமல்ல,, எல்லாக் காலங்களிலும் தொடர்ந்து செய்து கொண்டே இருக்க வேண்டும்.
எல்லாச் சொல், செயல்களிலும் ஹலால். ஹராமைப் பேணவேண்டும். உண்ணுதல் பருகுதல், கொடுக்கல் வாங்கல்,வர்த்தகப் பொருட்கள் போன்றவறறிலும் ஹராம்-பாவம்- கலவாது பாதுகாக்கவேண்டும். மார்க்கத்தை எல்லா நிலைகளிலும் பேணி நமது ஈமானை காத்துக் கொள்ளவேண்டும். நாம் பாவச்செயல்களிலே ஈடுபட்டிருக்கும் போது மலக்குல் மவ்த்து (மரண தூதர்) நம்மிடம் வந்துவிடக்கூடும் என்பதை எண்ணி எச்சரிக்கையாக இருங்கள்.
اللهم يا مقلب القلوب ثبت قلوبنا علي دينك
யாஅல்லாஹ்! இதயங்களை இயக்குபவனே! எங்கள் இதயங்களை உனது மார்க்கத்தில் நிலைத்திருக்கச் செய்வாயாக!الخاتامة முடிவுரை
وَمَا تَفْعَلُواْ مِنْ خَيْرٍ يَعْلَمْهُ اللّهُ وَتَزَوَّدُواْ فَإِنَّ خَيْرَ الزَّادِ التَّقْوَى وَاتَّقُونِ يَا أُوْلِي الأَلْبَابِ (البقرة197
நீங்கள் செய்யும் நன்மையான செயல்கள் அனைத்தையும் அல்லாஹ் அறிபவனாக உள்ளான். எனவே, (உங்களுக்கு கிடைத்த அரிய சந்தர்பத்தை) மகத்தானதாக ஆக்கிக் கொள்ளுங்கள். ஏனெனில் உங்கள் தயாரிப்புகளில் மிகச் சிறந்தது தக்வா இறையச்சமே ஆகும். அறிவுடையோரே! அல்லாஹ்வை (எப்போதும்) அஞ்சிக் கொள்ளங்கள். (2:197)இக்லாசான -தூய -வணக்கங்களும் இறையச்சமும் (தக்வாவும்) தான் ரமளானில் நாம் பெறும் மகத்தான பயன்கள்.
No comments:
Post a Comment