அஸ்ஸலாமு அலைக்கும்!
நீங்கள் புகை பிடிப்பவரா?
அப்படியானால் இது உங்களுக்குத்தான்.
புகையிலையில் உள்ள நிகோடின் பல்வேறு விதமான நோய்களுக்கு அச்சாரம் போடுகிறது. குறிப்பாக, புற்றுநோய் ஏற்பட புகைப்பழக்கம் முக்கியமான காரணம். அதனால் அப்பழக்கத்தைத் தவிர்த்துவிடுவதே நல்லது.
உலக சுகாதார நிறுவனம் (who) புகைப்பிடிக்கும் பழக்கத்துக்கு எதிராக உலகம் முழுவதும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.
ஒரு குறிப்பிட்ட வயதுக்குப் பின்னர்தான் இப்பழக்கத்திற்கு மனிதர்கள் அடிமையாகின்றார். அதனால், போதிய ஆலோசனைகள் கொடுத்து புகைப்பழக்கத்தை நிறுத்த முடியும் என்பது நிபுணர்களின் நம்பிக்கை.
புகைபிடிக்கும் .
பழக்கத்தை மறக்க சில யோசனைகள்:
புத்தாண்டு முதல் அல்லது வரும் பெர்த்டேயிலிருந்து சிகரெட் பிடிப்பதை நான் நிறுத்திவிடுவேன் என்று நண்பர்களிடம் சிலர் சவால் விடுவதைப் பார்த்திருப்பீர்கள். ஆனால் புத்தாண்டும் வந்து பார்த்டேயும் வந்து போயிருக்கும். சிகரெட் பிடிப்பதை மட்டும் நிறுத்தியிருக்க மாட்டார்கள். இப்படி கெடு வைத்து நிறுத்த முயற்சிப்பவர்கள் புகை பிடிக்கும் பழக்கத்தை நிறுத்துவது கடினம்.
புகை பிடிப்பதை நிறுத்தப்போகிறேன் என்று இந்நிமிடத்தில் இருந்து தூக்கிப்போட வேண்டும். மறுநாள் காலை சிகரெட் பிடிக்கவேண்டும் என்ற அரிப்பு எழும். அந்த நிமிடங்களை வன்முறையாகத்தான் அடக்கியாள வேண்டும்.
சிகரெட் பிடிக்கவேண்டும் என்ற சிந்தனை எழும்போதெல்லாம் முடியாது என்று உங்களுக்கு நீங்களே வேகமாக மறுக்கவேண்டும். மனம் சமாதானமடையும்.
ஒரு மணி நேரம் கழித்து மீண்டும் அந்த உந்துதல் எழும். இன்று ஒருநாள் மட்டும் பிடிப்போம். நாளையிலிருந்து விட்டுவிடுவோம் என்ற எண்ணம் தலை தூக்கும். உனக்கு சிகரெட் இல்லை. முடியாது, நீ எப்படிக் கெஞ்சினாலும் உனக்கு சிகரெட் கிடையாது. உனக்குத் தரப்படாது என்று உங்கள் மனதோடு நீங்களே போராட வேண்டியதிருக்கும். அந்த நிமிடத்திற்கு நீங்கள்தான் ஜெயிப்பீர்கள். உடனே, காலையில் முக்கியமாகப் பார்க்கவேண்டிய வேலை என்ன என்று தேடிப்போய்விட வேண்டும். மதியம் உணவு இடைவேளைக்குப் பிறகு கொஞ்சம் ஓய்வு கிடைக்கலாம். மதிய உணவு சாப்பிட்டபின் சிகரெட் பிடித்துப் பழகியதால், அந்த ஓய்வு நேரத்தில் சிகரெட் பிடிக்கலாம் என்ற எண்ணம் எழும்.
கொஞ்சமும் மசிந்து கொடுக்கக் கூடாது. ஓய்வு நேரத்தில் ஏதாவது வேலையைத் தேடி ஓடுங்கள். உறவினரையோ, குடும்பத்தாரையோ, மேலதிகாரிகளையோ மரியாதைக்குரியவர்களையோ சந்திக்கும் வேலையாகக் கூட அதை உருவாக்கிக் கொள்ளுங்கள். மரியாதைக்காக அவர்களைச் சந்திக்கும்போது புகை பிடிக்க வேண்டாம் என்று மனம் சொல்லும். இப்படி ஏதாவது ஒரு வேலைக்குள் நீங்கள் உங்களைச் சிக்க வைத்துக் கொண்டாலே பிற்பகல் எண்ணத்தை நீங்கள் தூக்கி எறிந்து விடலாம்.
அன்றைய இரவுதான் உங்களைப் படுத்தி எடுக்கும். ஒரே ஒரு தம் மட்டும் இழுத்துக்கொள்வோம் என்று மனம் சொல்லும். புகை நாற்றத்தில் ஊறிய வாய் நமநமக்கும். ரத்தத்துடன் கலந்துவிட்ட நிகோடின் உங்களுக்கு எதிராக மனத்தைத் தூண்டிவிடும். எப்படியாவது ஒரே ஒரு சிகரெட் இன்று இரவு மட்டும். நாளையிலிருந்து வேண்டாம் என்றெல்லாம் நீங்களே கூட நினைக்கக்கூடும்.
அடக்குங்கள். உங்களையும் உங்கள் மனதையும். அன்று இரவு கழிந்துவிட்டது. இரண்டாம் நாள் கொஞ்சம் கொஞ்சமாக எண்ணம் தலை தூக்க ஆரம்பிக்கும். முடியாது. வேண்டாம் என்று அடக்கிவிட்டு அன்றைய பிரச்னைகளில் அலுவல்களில் வழக்கத்துக்கு முன்பே இறங்கிவிடுங்கள்.
மூன்றாம் நாள், நான்காம் நாள் என்று ஒரு எட்டு நாளைக்கு அடக்கிப் பாருங்கள். அடங்கியிருங்கள். நீங்கள் எட்டு நாள் வெற்றி பெற்ற மமதையில் இருப்பீர்கள். எட்டு நாள்தான் ஒரு மனிதனின் பழக்கவழக்கத்திலிருந்து மாறும் காலக்கெடு. எட்டு நாள் கடந்துவிட்டால் (ஒரு சிகரெட் கூட, ஒரு தம் கூட இழுக்காமல்) உங்களால் சிகரெட் பழக்கத்தை முற்றிலும் நிறுத்தமுடியும். இது உறுதி.
செயின் ஸ்மோக்கர் என்பதால் ரத்தத்தில் உள்ள நிக்கோடின் எப்படியும் சிகரெட் பிடிக்க வைத்துவிடும் என்றெல்லாம் நண்பர்கள் உசுப்பேற்றுவார்கள். அவர்களை அலட்சியப்படுத்துங்கள். எட்டு நாளைக்குப் பிறகு உங்களால் வாழ்நாள் முழுவதும் சிகரெட் பிடிக்காமல் இருக்க இந்த அடக்கியாளும் உத்தி உதவும்.
இவையன்றி கீழே உள்ள சில யோசனைகள் உங்களுக்கு உதவக்கூடும்.
றீ மற்றவர்கள் புகை பிடித்துக்கொண்டு இருந்தால், அந்த இடத்தை விட்டு அகன்று விடுங்கள். புகை அலர்ஜி என்று அவர்களிடம் எடுத்துச் சொல்லுங்கள்.
றீ சூயிங்கம், நிகோடின் பேட்ஜ்கள் போன்றவற்றை உபயோகிக்கலாம். மூக்கு வழியாக உள்ளிழுக்கும் ‘ஸ்பிரே’யைப் பயன்படுத்தியும் புகைப்பழக்கத்தைத் தவிர்க்கலாம். இவற்றைப் பயன்படுத்த ஆரம்பித்த பின்னர், பயன்களை முழுமையாக உணரமுடியும்.
றீ சிகரெட்டிற்குப் பதிலாக, காபி, டீ, ஜூஸ் போன்ற பானங்களைக் குடிக்கலாம். புகை பிடிக்க வேண்டும் என்ற உணர்வு மேலோங்கும்போது இவற்றை அருந்தலாம்.
றீ குழந்தைகளுடன் விளையாடலாம். கொஞ்ச தூரம் நடக்கலாம். கைகளில் ‘க்ளோவுஸ்’ மாட்டிக்கொண்டால் சிகரெட் பிடிக்கவேண்டும் என்ற உந்துதல் வராது.
றீ காலையில் யோகா, மாலை வாக்கிங், முற்பகல் மந்திர ஜபம், பிற்பகல் தியானம் என்று ஒரு வரையறுக்கப்பட்ட வாழ்க்கை முறையை நமக்கு நாமே ஏற்படுத்திக்கொண்டால் நிச்சயம் புகை பிடிப்பதை மறக்க முடியும்.
றீ எல்லாவற்றையும்விட புகை பிடிப்பதால் ஏற்படும் தொந்தரவு, சந்ததியினருக்கு வரும் பிரச்னைகள் ஆகியவற்றை மனதில் கொண்டு, இந்த தொந்தரவு நமக்கு அவசியம்தானா என்று விலகிவிடுவது உத்தமம். புகை ஒரு விஷம் என்ற உணர்வை ஏற்படுத்திக் கொண்டால் விடுதலை நிச்சயம்.
No comments:
Post a Comment